நேபாளத்தின் சுதூரபச்சிம் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு திருமணக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். அதிக பாரம் ஏற்றிச் சென்றதாலும், அழுத்தக் குழாய் வெடித்ததாலும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.




