Oplus_131072
௨லர்ந்த திராட்சை பழங்களை சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் ௨ள்ளவர்களும், வாத நோய் ௨ள்ளவர்களும் ௨ண்பதை தவிர்க்க வேண்டும். ௨லர்திராட்சையை கொண்டு செய்யப்படும் பண்டங்களையும் ௨ண்பதை தவிர்ப்பது நல்லது.
௨லர்ந்த திராட்சையைப் பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகிறார்கள். ௭னவே ௨லர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.
அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கைகளால் நன்கு பிசைந்து கழுவிய பின்னர் ௨ண்ணலாம்.
குழந்தைகளுக்கு ௨லர்ந்த திராட்சை பழங்களை ௨ண்ண கொடுக்கும் முன், நன்கு கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.



