Oplus_131072
நமது முன்னோர்கள் நமக்கு காலம் காலமாக அறிவுரை கூறியபடி காப்பர் அல்லது பித்தளை பாத்திரங்களில் தண்ணீர் அருந்துவது நமக்கு நன்மையே ஆகும். ஆயுர்வேதத்தில் கூறியது போன்று நாம் காப்பர் அல்லது பித்தளை தண்ணீர் அருந்துவதால் நம் உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றும் சரியான அளவில் வைக்கப்படுகிறது.
காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது எப்போது நல்லது?
காப்பர் பாட்டிலில் குடிப்பது எப்போது நல்லது என்பதை பின்வரும் இரு ஆய்வுகளின் மூலம் தெரிந்துகொள்வோம்:
முதல் ஆய்வு:
அறிவியலாளர்கள் தண்ணீரை காப்பர் பாட்டிலில் சேமித்து வைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆராய்ந்தனர், இதற்காக இந்த ஆய்வில் அவர்கள் தண்ணீரில் மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய E-Coli மற்றும் Salmonalla ஆகியவற்றை கலந்தனர். மேலும் இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை காப்பர் பாட்டிலில் சுமார் 16 மணி நேரம் வைத்துஇருந்தனர். ஆய்வு முடிவில் அவர்களால் தண்ணீரில் உள்ள எந்த பாக்டீரியாவையும் மீட்க முடியவில்லை அவை அனைத்தும் இறந்து விட்டது.
இதோடு அவர்கள் தண்ணீரின் pH அளவும் உயர்வதை கண்டனர் மேலும் pH அளவு உயர்வதால் தண்ணீரானது ஆல்கலின் தண்ணீர் ஆகா மாறுகிறது இது உடலுக்கு பல்வேறு வகைகளில் உதவுகிறது.மேலும் அவர்கள் தண்ணீரில் காப்பரின் அளவு 0.2ppm என்று இருந்ததை கண்டனர் இது WHO என்ற அமைப்பினால் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.
இரண்டாவது ஆய்வு:
மேலும் சில அறிவியலாளர்கள் காப்பர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் இரண்டிலும் பாக்டீரியா கலந்த தண்ணீரை ஒரு இரவு முழுவதும் சேமித்து வைத்தனர் இந்த ஆய்வு முடிவில் அவர்களால் காப்பர் பாட்டிலில் உள்ள பாக்டீரியாவை மீட்க முடியவில்லை அனால் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள பாக்டீரியாவை எளிதாக மீட்க முடிந்தது.
இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில் காப்பர் பாட்டிலில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட நேரம் சேமித்து வைத்து குடிப்பது நல்லது என்று தெரிகிறது.
காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது எப்போது கெட்டது ?
WHO வால் அனுமதிக்கப்பட்ட காப்பர் அளவானது 12mg /day ஆகும். இந்த அளவினை மீறி காப்பர் உள்ள தண்ணீரை பருகுவது மிகவும் கெட்டதாகும் இது உங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை பாதிப்படைய செய்கிறது. மேலும் இது உங்கள் உடலில் உள்ள மெலனின் அளவை அதிகரித்து சுரக்க செய்து உங்களை கருப்பாக மாற்றுகிறது.
மேலும் தொடர்ந்து ஒருவருடம் முழுவதுமாக காப்பர் பாட்டிலை உபயோகிப்பதை தவிர்த்து ஒரு மூன்று மாதம் காப்பர் பாட்டிலிலும் அடுத்த மூன்று மாதம் வேறு பாட்டில்களிலும் குடிப்பதால் நமது உடலில் அளவுக்கு அதிகமான காப்பர் சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும் காப்பர் பாட்டில்களில் சுடு தண்ணீரை குடிப்பதை விட சாதாரண தண்ணீரை குடிப்பதே செரிமானத்திற்கு நல்லதாகும்.
கர்ப்பிணி பெண்கள் காப்பர் பாட்டிலில் தண்ணீர் அருந்தலாமா ?
காப்பர் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைத்து அருந்தினால் பெண்களுக்கு நல்லதேயாகும் ஆனாலும் இப்பொது வரும் காப்பர் பாட்டில்களில் பாதுகாப்பிற்காக சாயம் பூசப்படுகிறது இது காப்பர் தண்ணீருடன் வினைபுரிவதை தவிர்த்து சாயத்துடன் வினைபுரியச்செய்கிறது இது மிகவும் கேட்டது ஆகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் காப்பர் பாட்டில்கள் உபயோகிப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து கொள்வது நல்லது.
காப்பர் பாட்டிலில் கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் கீழ்வருமாறு :
செரிமாணத்தை சரி செய்கிறது .
புண்களை சீக்கிரம் ஆற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. தைராய்டு சுரப்பியை சரியான அளவு சுரக்க செய்கிறது. அயன் சக்தி அதிகரிக்க உதவுகிறது. தண்ணீரால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. இரத்த சோகையை குறைக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்கிறது. குழந்தையின் வளர்ச்சியை சரியான அளவில் வைக்கிறது. இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்கிறது.



