உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்போது 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பின் அடுத்த டெலிவரிக்கிடையில் 21 நாட்கள் இருக்க வேண்டும். இதற்கான மென்பொருள் ஏஜென்சிகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களுக்கு பிறகே முன்பதிவு செய்ய அனுமதிக்கும் நடைமுறை தற்போது பரிசீலனையில் உள்ளது.




