நம்மால் அனைத்து துறைகளிலுமே சாதிக்க முடியும்.. ஆனால் ஏன் முடிவதில்லை?.. நமக்கு யார் முதல் எதிரிகளாக உள்ளார்கள் என்று தெரியுமா?..

Oplus_131072

 

பயம்✅
கூச்சம்✅
தயக்கம்✅

(இவைகள் தான் அந்த எதிரிகள்….இவைகளை என்ன பண்ணலாம் என்று நீங்களே சொல்லுங்கள் கீழே உள்ள உண்மை சம்பவத்தை தெரிந்தபின்…..)

ஒரு சூப்பரான உண்மை சம்பவம் :

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார் தெரியுமா ? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல் ஆம்ஸ்ட்ராங் என்று…

நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்.. அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண்நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்.. எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்.., தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்… நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரே ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம்,கூச்சம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள் தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரிகள் …

முயன்றால்தான் தோல்வியையே வெற்றியையோ கூடம் பார்க்க முடியும். தயங்கினால் எந்த ஒரு துறையிலுமே சாதிக்கவே முடியாது. தோல்வி இல்லாமல் மிக பெரிய சாதனைகள் யாருமே புரிந்தது இல்லை.. வரும் புதிய வாய்ப்புகள்தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற வைக்கும்.. பயம், கூச்சம், தயக்கம் இல்லாமல் புதிய வாய்ப்புகளை ஏற்போம்… வாழ்வில் உயர்வோம்.

Read Previous

ஆரோக்கியம் முதல் சரும பளபளப்பு வரை.. அவகடோ ஆயில் ஏன் யூஸ் பண்ணனும்?..

Read Next

உடல் எடை குறைய, முதுகுவலி நீங்க, மூட்டு வலி நீங்க..இதை குடித்தாலே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular