கரிசலாங்கன்னியின் மருத்துவ பயன்கள்..!!

Oplus_131072

 

1. கல்லீரல் பாதுகாப்பு: கரிசலாங்கன்னி கல்லீரலுக்கு சிறந்த மருந்து. மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
2. முடி ஆரோக்கியம்: இதைத்தான் “கேசராஜா”ன்னு சொல்வாங்க. முடி உதிர்வை நிறுத்தி, முடி கருப்பாக வளர உதவும். இளநரையை தடுக்கும்.
3. கண் பார்வை: கண் பார்வை தெளிவு பெறவும், மாலைக்கண் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
4. தோல் ஆரோக்கியம்: தோல் நோய்கள், அரிப்பு, படை போன்றவற்றை குணப்படுத்தும்.
5. இரத்த சோகை: இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகையை போக்கும்.
6. சிறுநீரக பிரச்சனை: சிறுநீர் கட்டு, எரிச்சல் போன்றவற்றை சரி செய்யும்.
7. நோய் எதிர்ப்பு சக்தி: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதன் சிறப்பு பயன்கள்:
– கரிசலாங்கன்னி ஒரு சிறந்த “காயகல்ப” மூலிகை.
– இதில் வெள்ளை கரிசாலை, மஞ்சள் கரிசாலை என 2 வகை உண்டு. வெள்ளை கரிசாலை மருத்துவத்துக்கு சிறந்தது.

இதை எப்படி பயன்படுத்தலாம்?
– கரிசலாங்கன்னி சாறு காலையில் வெறும் வயிற்றில் 1-2 ஸ்பூன் குடிக்கலாம்.
– கரிசலாங்கன்னி தைலம் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் – முடி வளரும், கருப்பாகும்.
– கீரையாக சமைத்து சாப்பிடலாம்.
– பொடி செய்து தேன் அல்லது மோரில் கலந்து சாப்பிடலாம்.

வேறு பெயர்கள்:
– கரிசாலை
– கேசராஜா / பிருங்கராஜ்
– பொற்றலை கையாந்தகரை
– False Daisy (ஆங்கிலம்)
– தாவரவியல் பெயர்: Eclipta prostrata /Eclipta alba

குறிப்பு: குளிர்ச்சி தன்மை உள்ளதால் சளி, இருமல் இருக்கும்போது தவிர்க்கவும். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுக்க வேண்டாம்.

 

Read Previous

பருத்தி பாலில் இவ்வளவு நன்மைகளா..??

Read Next

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக.. தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular