வாழைக்காய் மசாலா ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க.‌.!!

Oplus_131072

வாழைக்காய் மசாலா………..

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 1.
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்.
சோம்பு – 1 டீஸ்பூன்.
கசகசா – 1 டீஸ்பூன்.
தனியா – 1/2 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – 4.
பூண்டு – 3 பல்.
கறிவேப்பிலை – சிறிது.
கடுகு – 1/2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.
உப்பு – தேவைக்கேற்ப.
எண்ணெய் – 2 ஸ்பூன்.

செய்முறை விளக்கம்

முதலில் வாழைக்காயை தோல் சீவி, வில்லைகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும்.
பின் கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய வாழைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக விடவும்.
வாழைக்காய் வெந்து தண்ணீர் வற்றியவுடன், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 நிமிடம் கிளறி இறக்கவும்.இப்போது வாழைக்காய் மசாலா தயார்.

Read Previous

நீர்ப்பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் இவ்வளவா..??

Read Next

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular