ஹரியானாவில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட ரோஹித் லால் (29) என்ற இளைஞர், தங்கியிருந்த விடுதியிலேயே உயிரிழந்தார். அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில், தனது வருங்கால மனைவியை விடுதிக்கு அழைத்திருந்தார். அவர் வருவதற்கு முன்பே மருந்தின் வீரியம் காரணமாக ரோஹித் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்துப் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.




