பி.ஆர். சுந்தர் கைது.. ஜாமீனில் விடுதலை; வழக்கு பரபரப்பு..!!

 

 

பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர். சுந்தர், பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அலுவலகத்தில் பாலியல் தொல்லை அளித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரது மனைவி மங்கையர்கரசி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read Previous

இன்று இந்த மாவட்டங்களில் மின் தடை.. முன்கூட்டியே தயாராகுங்கள்..!!

Read Next

60 வயதுக்கு மேல் இருப்பவர்கள்.. காலை உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular