தாய்மை எவ்வளவு அழகு என்பதை உணர்த்திய பதிவு..!!

Oplus_131072

ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், ‘கூனி இருக்காங்காளா?’ என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். அதற்கு அச்சிறுவன், ‘அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை’ எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான்.

♥சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாயிடம், ஒருவர் கூனி இருக்காங்களா? எனக் கேட்டார். இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அம்மா’ என்றான். தாய் அந்த சிறுவனின் அருகே அமர்ந்து,

♥’ஏம்ப்பா அம்மாவின் கூனை இதுவரை நீ பார்த்தது இல்லையா? இந்த ஊரில் பலர் என்னை கூனி என்று தானே கூப்பிடுவார்கள்’ என்று கூறியவுடன், மகன் அம்மாவை இறுக அணைத்து முத்தமிட்டு ‘அம்மா நான் உன்னை தாயாக தான் பார்த்தேன். இதுநாள் வரை எனக்கு உன்னுடைய ‘கூனே’ கண்ணுக்கு தெரியவில்லை’ என்றானாம். ஒரு குழந்தைக்கு தாய்தான் அழகு. அந்த பெண்ணுக்கு தாய்மை தான் அழகு.

♥மனைவியின்அழகு : ‘ஆசை அறுபது நாள்” ”மோகம் முப்பது நாள்” என்பது அந்த காலத்துபழமொழி. இதில் உள்ள அர்த்தம், வெளி அழகினால் உண்டாகும், ஆசையும், மோகமும் இரண்டு மாதங்கள் தான் நிலைக்கும்.

♥அதற்கு மேல் அந்த பெண்ணின் பழக்கவழக்கம், குணம், வேலை செய்யும் விதம், கணவனையும், அவரைச் சார்ந்தவர்களையும் அந்த பெண் கவனித்துக் கொள்ளும் விதம் இவை தான் அவளுடைய கணவனுக்கு அழகாகத் தெரியுமே ஒழிய அவளுடைய புற அழகு தெரியாது.

♥பெரிய அழகியை திருமணம் செய்து, சிம்மாசனத்தில் அமரச்செய்து, தினமும் பார்த்து ரசித்துக் கொண்டு வாழ முடியாது. நல்ல மனைவி என்பவள் அவளுக்குரிய கடமையை சரியாக செய்தால் தான் நேசிக்க முடியும், ரசிக்க முடியும்.

♥அந்தக் காலத்தில் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் நிச்சயிக்கப்பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு உண்ணும் உணவின் மூலமாகவே உடம்பை மெருகேற்றுவார்கள். ஆனால் இன்று ஒரு மணமகன் தன் குடும்பத்தாருடன் சென்று, மணப்பெண்ணை பார்த்து பிடித்து திருமண நாளை முடிவு செய்துவிட்டு சென்றது தான் தாமதம், பெண்ணின் தாயும், சகோதரிகளும் மணப்பெண்ணை எப்படியாவது இன்னும் அழகாக மாற்றுவதற்கு தீவிரமாக இறங்கி விடுகிறார்கள்.

♥கண்ட கண்ட கிரீம்களையும், எண்ணெய்களையும் முகத்திலும், தலையிலும் தேய்த்துக் கொண்டு, திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் முகம் வெந்து, அலர்ஜியாகி தோல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர்.

♥தலை அலங்காரத்தையும், உடை அலங்காரத்தையும் பயன்படுத்தி நம் அழகை கூட்டிக் கொள்ளலாமே. உடம்பையும், முகத்தையும் கெடுக்க கூடியவற்றை தவிர்க்கலாமே?

♥பல பெண்களின் புற அழகை விட அவர்களின் திறமையே மிக அழகாய் மிளிரும் என்பதே உண்மை.

♥அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாகதோன்றுவதின் முதல்படி.

♥ஒரு பெண்ணை சில நாட்கள் கழித்து சந்திக்கும் போது, அவருடைய புறத்தோற்றத்தை விமர்சித்து அவர் மனம் நோகும்படி கூறாதீர்கள். பலநாள் கழித்து சந்திக்கும்போது நன்றாக இருக்கிறாயா, உடம்பு சுகம் தானா, குடும்பத்தில் அனைவரும் நலம் தானா, எனக் கேட்டு, அவருடைய பெருமைகளையும், நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் கலந்து உரையாடுங்கள். மற்றவர்களுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தரும் பேச்சுகளை மட்டும் பேசுவோம்.

Read Previous

பணம் கொடுத்து அனைத்தையும் வாங்கிட முடியாது என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

Read Next

செவ்வாழை பற்றி நாம் அறியாத பல தகவல்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular