அரிசியுடன் இதை சேர்த்து வாரம் 2முறை யூஸ் பண்ணுங்க..!! உங்க தலை முடி அடர்த்தியாகும்..!!

Oplus_131072

அரிசி, வெந்தயம் மற்றும் முட்டை ஆகியவற்றை சேர்த்து எப்படி ஹேர்பேக் தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம்முடைய முடியை அடர்த்தியாக வளரச் செய்ய உதவுகிறது.

முந்தைய தலைமுறையினருக்கு கூட தற்போது வரை முடி அடர்த்தியாக இருக்கிறது. ஆனால், இன்றைய இளைஞர்களின் பெரும் கவலையாக முடி உதிர்வு பிரச்சனை உருவாகி உள்ளது. இதனை தடுப்பதற்கு என்ன வழி என்று சிந்திப்பதாலேயே கூடுதலாக முடி உதிர்வு உருவாகிறது.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காக முடி உதிர்வு ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதாவது, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், பொடுகு தொல்லை மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

இது தவிர தலை முடியை சரியாக பராமரிக்கா விட்டாலும் அதன் அடர்த்தி குறையத் தொடங்கும். இதற்காக, சில ஹேர்பேக்குகளை பயன்படுத்தி முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் போது அவை கூடுதல் பலன் அளிக்கும்.

அதன்படி, இரண்டு ஸ்பூன் அரிசி மற்றும் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்ததும் இவை இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதை பசை பதத்திற்கு அரைத்ததும், இதில் ஒரு முட்டையை சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.

இறுதியாக, இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு முறை அரைத்தால் போதும். இவ்வாறு செய்தால் நமக்கு தேவையான ஹேர்பேக் ரெடியாகி விடும். இதை தலையில் தேய்த்து விட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளித்து விடலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்யும் போது, முடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக வளரும்.

Read Previous

48 நாள் தொடர்ந்து இந்தக் கீரை.. பகலில் கூட நட்சத்திரம் பார்க்கலாம்..!! இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!!

Read Next

பூசணிக்காய் கூட்டு செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular