Oplus_131072
இந்த உயிர் காக்கும் கரிசலாங்கன்னி மூலிகை ஆகும்.
மஞ்சள் பூக்கும் கரிசாலை மிகச்சிறந்தது. பொற்றலைக் கையாந்தகரை பொன்னிறமாக்கும். உடலை பொன்னிறமாக மாற்றி, புத்தியையும் இரத்தத்தையும் தூய்மையாக்குகிறது. 5 வயது முதல் 100 வயது வரை ஆண், பெண் இருவரும் சாப்பிடலாம். பத்தியம் கிடையாது.
ஒரு மாதம் தினம் காலை / மாலை இதன் இலையை மென்று சாப்பிட்டு வந்தால் வாக்கு சுத்தமாகும்.
இரண்டு மாதம் சாப்பிட்டால் உடல் நோய் அகன்றுவிடும். சாராயம் குடிக்கும் அனைவருக்கும் இது அமிர்தமாகும்.
மூன்று மாதம் சாப்பிட்டால் இரத்தம் பிறந்த குழந்தைக்கு இருக்கும் சத்துக்கள் அனைத்தும் இருக்கும்.
நான்கு மாதம் சாப்பிட்டால் – எல்லா மலடியும் குழந்தை பெறுவாள்.
ஐந்து மாதம் சாப்பிட்டால் உலகில் அழகானவனாகவும் முகம் வசீகரமாகவும், அறிவாளியாகவும் மாறுவான்.
ஓராண்டு காலம் சாப்படுபவன் வாக்கு பலிக்கும்.
ஐந்தாண்டு சாப்படுபவன் யோகியாவான்.
மூலம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சரும நோய் என எல்லா நோய்களையும் போக்கும் சிவமருந்து இது.




