நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில், ராஜஸ்தான் சிகாரில் பிரதீப் மேக்வால் என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் அவர் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மருத்துவர் ஆவார் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர். தேர்வு ரத்தானதால் அதிர்ச்சியடைந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், இது மனதை உலுக்குவதாகப் பதிவிட்டுள்ளார்.




