வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்பு..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்புகளை எல்லாம் நாம் நினைவில் வைத்து அதை பின்பற்றினாலே போதும். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் தினமும் காலையில் எழுந்தவுடன் தூய மனதுடன் சில நிமிடங்கள் ஆவது கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும். இதை காலை மாலை என இரு வேலையும் செய்ய வேண்டும். வீடுகளில் உள்ள பூஜை அறையில் உடைந்த மற்றும் தேவையில்லாத பொருட்களை ஒருபொழுதும் சேர்த்து வைக்கக் கூடாது. குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும் இல்லை என்றால் கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் நன்றாக துடைக்க வேண்டும். நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்த்து எழ வேண்டும் இவ்வாறு செய்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும். அம்மாவாசை திவசம் ஆகிய நாட்களில் ஒரு பொழுதும் வீட்டில் வாசலில் கோலம் போடக்கூடாது. பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காமல் பூஜை செய்யக்கூடாது. பெண்கள் தலையை விரித்து போட்டு பூஜை செய்யக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்க கூடாது. சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை ஒருபொழுதும் சூடக் கூடாது. வீட்டின் நிலைகளில் குங்குமம் மஞ்சள் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் தீய சக்திகள் விலகி நல்ல சக்திகள் வீட்டிற்குள் வரும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது. வீட்டு பூஜை அறையில் கற்பூரம் மற்றும் தீபம் இரண்டுமே தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் ஒரு பொழுதும் அணைக்க கூடாது. இதுபோல சில பூஜை குறிப்புகளை நாம் பின்பற்றி ஞாபகத்தில் வைத்து அதை பின்பற்றினாலே நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் உருவாகி செல்வம் செழிக்கும்.

Read Previous

திருமணமான தம்பதியினர் தினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன மற்றும் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?..

Read Next

SBI வங்கியில் Trade Finance Officer வேலை..!! 100 காலியிடங்கள்..!! சம்பளம் ₹93,000 வரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular