Oplus_131072
பெருநகரங்களில் வாகனங்களால் ஏற்படும் புகை தொடங்கி, பனிப் பொழிவு என நிறைய காரணங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு உண்டாகிறது. இவை நேரடியாக நம்முடைய நுரையீரலையும் மூச்சுக்குழாய் பகுதியையும் தான் பாதிக்கின்றன. இப்படி நுரையீரலில் சேரும் அழுக்குகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி நுரையீரலை சுத்தம் செய்ய ஆயுர்வேதத்தில் சில எளிமையான தீர்வுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
நுரையீரல்ல இருக்கற அழுக்கெல்லாம் பிழிஞ்சி எடுக்கணுமா? ஆயுர்வேதம் சொல்ற இந்தெ 5 சிம்பிள் வழியை செய்ங்க போதும்…
நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை முழுமையாக பாதித்துவிடும். குறிப்பாக குளிர்காலங்களில் சளி, இருமல் உள்ளிட்ட பருவ கால நோய்களையு் தவிர்ப்பதற்கு நுரையீரலை டீடாக்ஸ் செய்ய வேண்டியது முக்கியம்.
நீராவி பிடியுங்கள்
குளிர்காலத்தில் நிறைய காரணங்களால் மூக்கடைப்பு, நெஞ்சு சளி, இருமல், என நுரையீரலை பாதிக்கும் பிரச்சினைகள் இருக்கும். அவற்றை சரிசெய்ய நீராவி பிடிப்பது மிகச்சிறந்த வழிமுறையாகும்.
காலங்காலமாக நுரையீரலைச் சுத்தம் செய்ய நாம் பின்பற்றும் முறைகளில் இந்த நீராவி பிடிப்பது மிக முக்கியமான ஒரு சிகிச்சை என்று சொல்லலாம். மஞ்சள், எலுமிச்சை, புதினா, துளசி என சூடான நீரில் போட்டு ஆவி பிடிப்பது தொண்டைக்கு இதமாக இருப்பதோடு உடல் முழுவதும் டீடாக்ஸ் செய்து கழிவுகளை வெளியேற்றும்.
மூலிகை தேநீர் குடிக்கவும்
நுரையீரலை பாதுகாத்து கழிவுகளை வெளியேற்ற ஹெர்பல் டீ மிகச்சிறந்த நிவாரணமாக இருக்கும்.
துளசி, அஸ்வகந்தா, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படும் ஹெர்பல் டீயை எடுத்துக் கொள்வது நல்லது.
இது நம் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றி ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்…




