குளியல் முறையின் மூலம் தீரும் கிரக தோஷங்கள்..!!

எளிய குளியல் பரிகாரங்கள் மூலம் கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்து, நற்பலன்கள் பெற்று வாழலாம் என்பது ஐதீகம். ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்ப தினசரி குளியல் முறையை கையாள்வதால் நிச்சயம் நற்பலன்களை பெற்று வாழலாம்.

சூரியன்: கசகசாவை பொடி செய்து நீரில் கலந்து அல்லது குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிவப்பு நிற மலர்களை நீரில் போட்டு குளித்து வரலாம். (சிறிதளவு போதும்) இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளிக்கலாம்

சந்திரன்: தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்து விட்டு சிறிது ஊறிய பின்பு குளிக்கவும்.

செவ்வாய்: வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

புதன்: மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

வியாழன்: கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

சுக்கிரன்: பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

சனி: கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

ராகு: மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் சேர்த்து குளித்து வரலாம்.

கேது: அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

 

Read Previous

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular