பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு’ என்று தனியாக பிரத்யேக தொலைபேசி எண் எதுவும் இல்லை என்று அதன் தலைவர் ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். ஆபத்து காலங்களில் பெண்கள் எப்போதும்போல ‘100’ என்ற அவசர உதவி எண்ணையே தொடர்பு கொண்டு தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். எனவே, பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வழக்கமான காவல் கட்டுப்பாட்டு அறையை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




