அமைச்சர் ஆய்வால் குழந்தைக்கு சிகிச்சை மறுப்பு?.. கேரள அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

கேரள மாநிலம் தொடுபுழா அரசு மருத்துவமனையில் அமைச்சரின் ஆய்வு காரணமாக, கடும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வந்த குழந்தை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் அமைச்சருடன் ஆய்வுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. பின்னர், குழந்தையை கொல்லம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் காய்ச்சலுடன் வந்த குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காதது தொடர்பாக இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Read Previous

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: கீழே விழுந்து 32 வயது இளைஞர் உயிரிழப்பு..!!

Read Next

Google Pay-ல் தவறாக பணம் அனுப்பிட்டீங்களா?.. உடனே இதை செய்யுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular