குஜராத் மாநிலம் பனோலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் கதவு அருகே அமர்ந்திருந்த அசோக் (32) என்பவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திடீரென பறித்துள்ளார். செல்போனை பறித்த வேகத்தில் அசோக் நிலைகுலைந்து தடுமாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து, ரயிலின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த அசோக்கின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, செல்போனை பறித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.




