இன்றைய காலத்தில் Google Pay, PhonePe, UPI போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. அவசரத்தில் தவறான UPI ID அல்லது வேறு நபருக்கு பணம் அனுப்பும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்று தவறுதலாக Google Pay மூலம் பணம் அனுப்பிவிட்டால், பணத்தை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலில், Transaction ID (UTR), பரிவர்த்தனை தேதி மற்றும் நேரம், தொகை, பெறுநரின் UPI ID மற்றும் Payment Screenshot ஆகியவற்றை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும். பின்னர் Google Pay செயலியில் Help பகுதிக்குச் சென்று, தவறான பணப் பரிவர்த்தனை தொடர்பாக புகார் பதிவு செய்யலாம்.
அதன்பிறகு, உங்கள் வங்கியை உடனடியாக தொடர்புகொண்டு Transaction ID-ஐ வழங்கி, பணத்தை மீட்டெடுக்க உதவி கோர வேண்டும். டிஜிட்டல் மோசடி அல்லது தவறான பரிவர்த்தனை தொடர்பாக 1930 சைபர் உதவி எண்ணிலும் புகார் அளிக்கலாம். மேலும், cybercrime.gov.in தளத்தில் ஆன்லைனிலும் புகார் பதிவு செய்யலாம். பிரச்சினை தீராத பட்சத்தில் தேவையான சட்ட ஆலோசனையைப் பெறலாம்.
தவறாக அனுப்பிய பணத்தை மீட்க தாமதிக்காமல் நடவடிக்கை எடுப்பது முக்கியம். OTP, PIN, Password போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது.




