ரகசியங்கள், கிசுகிசுக்களை விற்று 2 வீடுகள் வாங்கிய பெண்..!!

 

கொலம்பியாவைச் சேர்ந்த மிரியம் என்ற பெண், பிறரின் ரகசியங்கள் மற்றும் கிசுகிசுக்களை ஆதாரங்களுடன் சேகரித்து விற்பனை செய்வதையே தனது தொழிலாக செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அவர் இரண்டு சொந்த வீடுகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பவர்களின் தகவல்களை அவர்களது இணையிடம் தெரிவிக்காமல் இருப்பதற்காக பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் விற்பனை செய்து வருகிறார். இதற்காக மிரியம் எங்கு சென்றாலும் கையில் குறிப்பேட்டுடன் செல்வதையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உரையாடல்களை தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். பிறரது தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அவற்றை பணத்திற்கு விற்பனை செய்து வருவதன் மூலம் அவர் தனது வருமானத்தை பெருக்கியுள்ளார்.

 

Read Previous

சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு செய்வது எப்படி?..

Read Next

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: கீழே விழுந்து 32 வயது இளைஞர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular