சென்னை: “தைரியம் இருந்தால், தில்லு இருந்தால், திமுக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோஷியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தவெக கூட்டத்தில் நேற்று (ஜூன்.14) பேசுகையில், “என்னுடைய தொகுதியில் நான் 30 லட்சம் கூட செலவு செய்யவில்லை. ஆனால், என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்” என விமர்சித்துள்ளார்.




