மேற்கு ஈரானின் மலைப்பகுதிகளில் வாழும் ‘ஸ்னைப்பர் பாம்பு’ (Spider-tailed Horned Viper) உலகின் மிகவும் வித்தியாசமான நச்சுப் பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் பாம்பின் வாலின் நுனிப்பகுதி சிலந்தியைப் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. வேட்டையாடும் நேரத்தில், தனது வாலை சிலந்தி ஊர்ந்து செல்வது போல அசைத்து பறவைகளை ஏமாற்றுகிறது. இரையைப் பிடிக்க அருகில் வரும் பறவைகளை, மின்னல் வேகத்தில் தாக்கி வேட்டையாடும் தனித்துவமான திறன் இந்தப் பாம்புக்கு உள்ளது.
இயற்கையின் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படும் இந்த அபூர்வ பாம்பு, தனது உடல் அமைப்பையும் வேட்டையாடும் உத்தியையும் கொண்டு உலகம் முழுவதும் வனவிலங்கு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.




