சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்திருந்தாலும், மீன்களின் வரத்து எதிர்பார்த்த அளவில் அதிகரிக்காததால் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது.
நேற்று வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ₹1,300-க்கும், வவ்வால் மீன் ஒரு கிலோ ₹1,900-க்கும் விற்பனையானது. முக்கிய ரக மீன்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெரும்பாலான உயர்தர மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், உள்ளூர் சந்தையில் மீன்களின் கிடைக்கும் அளவு குறைந்து விலை அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, உள்ளூர் சந்தைக்குத் தேவையான அளவில் மீன்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மீன்வளத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




