அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், மக்கள் பணத்தைக் கையாடல் செய்தது உறுதியானால் அவர்கள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அமைச்சர் என். ஆனந்த் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “மக்கள் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது எந்தவித சலுகையும் காட்டப்படாது. இது முதல்வர் விஜய்யின் கறாரான உத்தரவு” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், தவெக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமைச்சர் என். ஆனந்தின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.




