மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர்.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

மார்க்கண்டேயன் கைது: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்..

முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகக் கூறி விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை விமர்சிப்பவர்களை தவெக அரசு தொடர்ந்து குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசியல் விமர்சனங்களை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினருக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மைதானத்தில் மாத்திரை அரைத்ததாக சர்ச்சைக்குள்ளான அமைச்சர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அவசரமாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்குப் பதிலாக, சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

மார்க்கண்டேயன் கைது: ‘மனித உரிமை மீறல்’ என ஸ்டாலின் கண்டனம்..!!

Read Next

இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular