உலகம் முழுவதும் சுமார் 3,900-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. பாம்புகள் கால்கள் இல்லாத, ஊர்வன வகையைச் சேர்ந்த நீண்ட முதுகெலும்புள்ள உயிரினங்களாகும். பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்றாலும், இந்தியாவில் நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டுவிரியன் போன்ற சில முக்கிய நச்சுப் பாம்புகள் உள்ளன.
இந்நிலையில், ஒரு இளைஞரை இரண்டு பாம்புகள் ஒரே திசையில் பின்தொடர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஒரு அறைக்குள் சட்டை அணிந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குப் பின்னால் இரண்டு பாம்புகள் இருப்பது போல காட்சிகள் பதிவாகியுள்ளன.
பின்னர் அந்த இளைஞர் சட்டையை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே செல்லும் போது, அந்த இரண்டு பாம்புகளும் அவரைப் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை Instagram தளத்தில் @nmspiyas என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், “இந்த வீடியோ உண்மையானதா? அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா?” என பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram




