சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி வீசிய சக்திவாய்ந்த சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த காற்றுடன் வீசிய புயலால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சூறாவளிக் காற்று தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த கடுமையான புயலால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 20 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பரபரப்பு வீடியோ:




