திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) Multipurpose Health Worker / Health Inspector Grade II பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. +2-ல் Biology அல்லது Botany & Zoology பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector 2 ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹17,500 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. தகுதியானவர்கள் 07.08.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
பணியின் வகை: தமிழ்நாடு அரசு வேலை
பதவி: Multipurpose Health Worker / Health Inspector Grade II
காலியிடங்கள்: 30
பணியிடம்: திருச்சி, தமிழ்நாடு
விண்ணப்ப தொடக்க தேதி: 22.07.2026
கடைசி தேதி: 07.08.2026
சம்பளம்: ₹17,500
கல்வித் தகுதி:
- +2 தேர்ச்சி (Biology அல்லது Botany & Zoology)
- 10ம் வகுப்பில் தமிழ் மொழி பாடமாக படித்திருக்க வேண்டும்
- Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector 2 ஆண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை திருச்சி மாவட்ட இணையதளத்தின் ஆட்சேர்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
ரேஸ் கோர்ஸ் ரோடு,
ஜமால் முகமது கல்லூரி அருகில்,
T.V.S. டோல்கேட்,
திருச்சிராப்பள்ளி – 620 020.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:
07.08.2026 மாலை 5.00 மணிக்குள்.
விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2026/07/17847190949942.pdf




