நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்காக பெற்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்த மாணவி, தேர்வில் தோல்வியை மட்டுமே அவர்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




