Oplus_16908288
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இளம்பெண் ஒருவரின் சடலம் தவறுதலாக வேறொருவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை பெற்றுச் சென்ற உறவினர்கள், வீட்டில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெறும் போது அது தங்களது உறவினரின் சடலம் அல்ல என்பதை கண்டறிந்தனர். பின்னர், 18 வயதான பிரியதர்ஷினியின் சடலத்திற்கு பதிலாக 19 வயதான அனுஷ்காவின் சடலம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவல் கிடைத்ததும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரு குடும்பங்களிடமும் சடலங்களை சரியாக மாற்றி ஒப்படைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.




