தேர்தலின்போது அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகையை தவெக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் நிதிநிலையை காரணம் காட்டி திட்டத்தை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். மேலும், முந்தைய திமுக அரசைப் போலவே சாக்குப்போக்கு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்துவது, வாக்குறுதியை நம்பி வாக்களித்த பெண்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசின் பொறுப்பு என்பதால், முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.




