Oplus_16908288
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கைக்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோயில் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டு நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மையமாக வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் பங்கு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தற்போது போலீசாரால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.




