தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், உயர்கல்வி, மின்சார வாகனங்கள், உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) இன்று கையெழுத்தாகின்றன.
இதற்காக சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தமிழக அரசின் தொழில் வழிகாட்டு மையத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.
இந்த ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, கோவையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் எல்&டி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், தொழில் வளர்ச்சி, மேம்பட்ட உற்பத்தி வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி, தமிழ்நாட்டை தொழில் மற்றும் உயர் தொழில்நுட்ப முதலீடுகளுக்கான முன்னணி மாநிலமாக மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.




