20 சதவீத எத்தனால் (E20) கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களின் எஞ்சின்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில், 2016-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட BS-III தரநிலையைச் சேர்ந்த சில பழைய வாகனங்களில் உள்ள ரப்பர் உதிரிபாகங்கள் மட்டும் காலப்போக்கில் சிறிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இது பெரிய தொழில்நுட்ப சிக்கல் அல்ல என்றும், வழக்கமான வாகன பராமரிப்பு அல்லது சர்வீஸின் போது அந்த ரப்பர் பாகங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தனது எழுத்துப்பூர்வ பதிலில் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து வாகன உரிமையாளர்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகங்களுக்கு மத்திய அரசு தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது.




