அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வேகம்.. 70% இடங்கள் ஏற்கனவே நிரம்பின..!!

 

 

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 கல்வியாண்டிற்கான பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

மொத்தம் உள்ள 1,28,667 இடங்களில் இதுவரை 90,334 இடங்கள் நிரம்பியுள்ளன. இதன்படி, மாநிலம் முழுவதும் 70.20 சதவீத இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காலியாக உள்ள மீதமுள்ள இடங்களும் அடுத்த கட்ட கலந்தாய்வுகளில் விரைவில் நிரப்பப்படும் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து உயர் கல்வியைத் தொடரும் நிலையில், இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை உற்சாகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Read Previous

E20 பெட்ரோல் குறித்து முக்கிய விளக்கம்.. எஞ்சினுக்கு பாதிப்பு இல்லை என நிதின் கட்கரி உறுதி..!!

Read Next

ஹாலிவுட் திரையுலகிற்கு பேரிழப்பு.. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular