மஞ்சள் விலை சரிவு: குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் வரை குறைந்தது; ஈரோடு சந்தையில் வரத்து அதிகரிப்பு..!!

 

கடந்த மாதம் உச்சத்தை தொட்ட மஞ்சள் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் குவிண்டால் ரூ.19,779 வரை விற்பனையான விரலி மஞ்சள், தற்போது சுமார் ரூ.2 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு மஞ்சள் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த மாதம் மஞ்சளுக்கான தேவை அதிகரித்திருந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய மஞ்சள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்ததாக தெரிவித்தனர். இதனால் விரலி மஞ்சளின் விலை அதிகபட்சமாக ரூ.19 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

ஆனால் தற்போது தேசிய அளவில் உள்ள முக்கிய மஞ்சள் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் மஞ்சள் விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது.

ஈரோடு மஞ்சள் சந்தையில் நேற்று நடைபெற்ற விற்பனையில், விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.11,329 முதல் ரூ.18,311 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.10,869 முதல் ரூ.16,616 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

மஞ்சள் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் புதிய நிலவரத்தை கண்காணித்து வருவதாகவும், வரும் நாட்களில் வரத்து மற்றும் தேவையை பொறுத்து விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Read Previous

அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..!!

Read Next

மேகதாது அணை விவகாரம்: பாஜக, காங்கிரஸ் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular