தமிழ்நாடு அரசில் வேலை.. TNWEC-ல் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு..!!

 

 

தமிழ்நாடு வனப்பகுதி அனுபவங்கள் கழகம் (TNWEC – Tamil Nadu Wilderness Experiences Corporation) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசு நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்.

 

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது 30 முதல் 40 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் மற்றும் ஆவணச் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.08.2026. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் காலக்கெடுவிற்கு முன்பாக விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

மேலும் விவரங்களுக்கு:

https://tnwec.com/careers

Read Previous

வரலாறு படைத்த டிபிஎஸ் வங்கி.. உலகின் சிறந்த கார்ப்பரேட் வங்கி என்ற பெருமை..!!

Read Next

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கிறீர்களா?.. காத்திருக்கும் உடல்நல ஆபத்துகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular