மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 7) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அமல்படுத்தப்பட உள்ளது. தர்மபுரி, கரூர், புதுக்கோட்டை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். எனவே, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




