‘டிசி’ படத்தை பாராட்டிய சூர்யா: படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..!!

 

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான ‘டிசி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் கதாபாத்திரத்திலும், வாமிகா கபி சந்திரா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இதுவரை ரூ.18 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘டிசி’ திரைப்படத்தை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். அனைவரும் ‘டிசி’ படத்தைப் பற்றி பேசுவதை கேட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக தனது X பக்கத்தில் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Read Previous

வெற்றிலையின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் சளி, இருமல் வரை..!!

Read Next

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 வேலைவாய்ப்புகள்: பட்டதாரிகள் ஆக.24க்குள் விண்ணப்பிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular