தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போதுதான், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் பிரதிபலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிரான தற்போதைய நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.




