சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 

 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது, மத்திய அரசு தயாரித்துள்ள சாதிகள் பட்டியலில் இருந்து பொதுமக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

 

கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், மக்களிடம் இருந்து சாதிப் பெயர்கள் நேரடியாக பதிவு செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக 46.70 லட்சம் வெவ்வேறு சாதிப் பெயர்கள் இருப்பதாக தரவுகள் வெளியானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இத்தகைய நடைமுறை குழப்பத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், சாதிகளின் பெயர்களை முறைப்படுத்தி, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது துல்லியமான தரவுகளைப் பெற உதவும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

“தொகுதி மறுவரையறை தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்..!!

Read Next

இந்தோனேசியாவில் நடுக்கடலில் தீப்பிடித்த படகு: ஒருவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular