வில்லிவாக்கம் மக்களின் குறைகளை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்..!!

 

 

வில்லிவாக்கம் தொகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை எளிதாகவும் விரைவாகவும் தெரிவிக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா NAMMAAADHAV.COM என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

 

இந்த இணையதளம் மூலம் தொகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகள், பொதுமக்களின் தேவைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் இடையேயான தொடர்பு மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

கிளாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பிரபல ரவுடியின் வீட்டில் பரபரப்பு..!!

Read Next

“தொகுதி மறுவரையறை தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular