கோயில் திருவிழாவில் ஆபாச நடனமா? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

 

 

கோயில் திருவிழாக்களில் கரகாட்டம் என்ற பெயரில் ஆபாச உடைகள் அணிந்து நடனம் ஆடுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அரியலூர் மாவட்டம் பாப்பாத்தம்மன் கோயில் திருவிழா தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி லட்சுமி நாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை மீறி ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் பெயரில் நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்படுவதைத் தடுக்க இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read Previous

ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,550 வருமானம்! போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

Read Next

செல்போன் பயன்பாட்டால் நடிகை ஷகீலாவுக்கு அறுவை சிகிச்சையா? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular