விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருட்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.




