சென்னையில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மளிகைக்கடைக்காரர் பழனிசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவியிடம் பள்ளி ஆசிரியை நடத்திய விசாரணையின்போது, அவருக்கு நேர்ந்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பழனிசாமி மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




