கரூர் விவகாரம்: 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய உத்தரவு ரத்து செய்ததற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

 

 

கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது.

 

கரூரில் நடைபெற்ற தவெக கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கடந்த ஆண்டு 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் 31 பேருக்கு கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

 

இந்த அரசுப்பணி ஆணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Previous

முன்னாள் தேசிய கால்பந்து வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

Read Next

அரசு அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு: பழனியில் சர்ச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular