மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயவியல் பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் ஜே.பி. நட்டாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் தற்போது எந்தவித கவலைக்கிடமான அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




