கால சர்ப்ப தோஷம் மற்றும் ராகு-கேது தோஷங்களை நீக்கும் சிறப்புமிக்க நாக சதுர்த்தி வழிபாடு வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் அதிகாலையில் நீராடி விரதமிருந்து, ஆலயங்களில் உள்ள நாக புற்று மற்றும் நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
மேலும், மஞ்சள், குங்குமம் வைத்து அஷ்ட நாகங்களை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
நாக சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பதால் திருமணத் தடை நீங்கி, புத்திர பாக்கியம் கிடைப்பதுடன் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.




