சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிறப்பு நிதி ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் சுதந்திர தின விழாவில் கவனம் பெற்றுள்ளன.




